
Seetha Payanam release date : நடிகரும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா இயக்கும் புதிய படமான 'சீதா பயணம்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை காட்டும் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
பல மொழிகளில் உருவாகும் 'சீதா பயணம்' படத்தில் அர்ஜுன் சர்ஜாவின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கிறார். நிரஞ்சன் சுதீந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். தந்தையும் மகளும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் 'சீதா பயணம்' அதிக கவனம் பெற்றுள்ளது.
கன்னட ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் துருவா சர்ஜாவும் 'சீதா பயணம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, சரண், சிரி ஹனுமந்த், மணி சந்தனா, சுமித்ரா, போசானி கிருஷ்ண மூர்த்தி, ஜபர்தஸ்த் ஃபனி, நர்ரா ஸ்ரீனு, ஃபிஷ் வெங்கட் போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு ரொமான்டிக் டிராமாவாக உருவாகும் 'சீதா பயணம்' படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை அர்ஜுன் சர்ஜாவே மேற்கொண்டுள்ளார். அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்பை அயூப் கானும், ஒளிப்பதிவை ஜி. பாலமுருகனும் கையாளுகின்றனர். 'பட்டத்து யானை', 'பிரேம பரஹா' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா அர்ஜுன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் படம் என்பதால், 'சீதா பயணம்' படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 2026 பிப்ரவரி 14 அன்று, காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு மனதைத் தொடும் ஒரு சினிமா அனுபவத்தை 'சீதா பயணம்' வழங்கும். என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.