தூக்கி எரிந்து பேசிய அர்ச்சனா..! செம்ம அப்செட்டில் ரியோ..!

Published : Dec 15, 2020, 04:20 PM IST
தூக்கி எரிந்து பேசிய அர்ச்சனா..! செம்ம அப்செட்டில் ரியோ..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேறிய கவலையில் இருந்து மீண்டு, தற்போது மீண்டும் டாஸ்குகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் அர்ச்சனா. அன்பு குரூப்பில் இருந்து ஒரேயடியாக இரண்டு பேர் சென்றதால் கடந்த இரண்டு நாட்களாகவே கொஞ்சம் அப்செட்டில் தான் இருந்தனர் அன்பு அணியை சேர்ந்தவர்கள்.  

இந்நிலையில் இன்று சண்டைக்கு பஞ்சம் இல்லாத டாக்கை தான் பிக்பாஸ் கொடுத்தார். முதல் புரோமோவில் அடித்து பிடித்து விளையாடினார்கள் போட்டியாளர்கள். இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரோமோவில், ஆரி - அர்ச்சனா இடையே கடும் வாக்குவாதம் வந்தது. பின்னர் அர்ச்சனாவிடம் ஆரி சவால் விட்டு விளையாட்டை மேற்கொள்வதையும் பார்த்தோம்.

இதைத்தொடர்ந்து சற்று முன்னர் வெளியாகியுள்ள புரோமோவில், அர்ச்சனா தன்னுடைய அணியில் உள்ள ரியோவையே தூக்கி எரிந்து பேசுவது வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் நரிகள் குரூப்பாக சென்று தாக்க வேண்டும் என்று சொன்னது நீங்கள் தான், ஆனால் அதை நீங்களே கடைபிடிக்கவில்லையே என அர்ச்சனாவிடம் ரியோ கேட்க, உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் கூறுகிறார்.

பின்னர் பாலாஜியின் பக்கத்தில் உள்ள நியாயத்தை ஆதரித்து பேசுவதும் ரியோ, நீ மட்டும் தான் அதை ஃபாலோ பண்ணுன  அதை தான் ஏன் என்று கேட்பதாக சோகமாக கூறுகிறார். பின்னர், ரியோவை கிண்டல் செய்வது போலவே... டேமேஜான பீசு நானு என்கிற பாடலை பாடியுள்ளார். 

இதுகுறித்த புரோமோ இதோ...
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?