என் கான்சப்ட்டை திருடிட்டார் ஏ.ஆர்.ரகுமான்..! பல கோடி நஷ்டம் பரபரப்பை ஏற்படுத்திய பாபு கணேஷ்!

By manimegalai aFirst Published Jul 18, 2020, 2:54 PM IST
Highlights

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய கான்செப்டை திருடிவிட்டார் என்றும் இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய கான்செப்டை திருடிவிட்டார் என்றும் இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் தனி துவமே அவருடைய பாடல்கள் கேட்பதற்கு புதிதாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மெல்லிய அலை போல் காதில் பாயும் இவருடைய இசைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல ரசிகர்கள் அடிமைகள். இவர் மீது தான் இப்படி ஒரு புகார் கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாபு கணேஷ்.

தேசிய பறவை, நானே வருவேன், காட்டுப்புறா என தொடர்ந்து தமிழ் திரையுலகில் தோல்விகளை கண்டாலும் படம் இயக்கியும், தயாரித்தும் வருபவர் பாபு கணேஷ். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். எனவே திரையுலகில் மிக முக்கிய பிரபலங்களில் இவரும் ஒருவராக அறியப்படுகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி அவர் கூறுகையில். கடந்த 2000 ஆம் ஆண்டு நான் உருவாக்கிய கான்செப்ட் ஒன்று வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிய புக், இந்தியா புக், மற்றும் யூனிவேர்சல் புக் போன்றவற்றிலும் இடம்பெற்று சாதனை செய்துள்ளது.

இந்த கான்செப்ட் வைத்து தான் தற்போது ஏ.ஆர்.ரகுமான் 'லீ மஸ்க்' என்கிற படத்தை ஆங்கிலத்தில் இயக்கி, தயாரித்துள்ளதாகவும், ஆனால் இதனை அவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு மியூசிக் யூனியன் மூலம் மெயில் மூலமாக கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கான்செப்ட் பயன்படுத்தி தான் காட்டு புறா என்கிற படத்தை நான் இயக்கி, தயாரித்துள்ளேன். இந்த கான்செப்ட் மீது உள்ள நம்பிக்கையில் தான் தனக்கு பைனாசியர்கள் பணம் கொடுத்தனர். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இதனை பயன்படுத்தியதால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து எந்த பதிலும் இல்லாதததால், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

click me!