
பாலிவுட்தில் கொடி கட்டி பறக்கும் ஷாருக்கான்,அடுத்து வரும்"ஜீரோ " என்ற படத்தில் குள்ளமான நபராக நடிக்கிறார்.ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த படத்தில்,கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா கதாநாயாகியாக நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் கத்ரீனா கைப் நடிக்கிறார்.மேலும் இந்த படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக,சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார் .
இதில் என்ன ஒரு அழகு என்றால்,சம்லான் கான் மற்றும் ஷாருகான் இணைந்து நடிப்பது 10 வருடத்திற்கு பிறகு இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனுஷ்கா சர்மாவை பொறுத்தவரையில்,அவருடைய திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம் ஜீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.