
நடிகை அனுஷ்கா மற்றும் நயன்தாரா இருவரும் கோலிவுட், திரையுலகில் முன்னணி நடிகைகள். ரசிகர்களால் ஒரே மாதிரி பிரித்து பார்க்க முடியாத அளவிக்கு திறமையான நடிகைகள்.
தற்போது அனுஷ்கா நடித்து வெளியாகியுள்ள 'பாகமதி' திரைப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும். அனுஷ்காவின் நடிப்பை அனைத்து தரப்பு ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் நடிகை நயன்தாராவை இவருடன் ஒப்பிட்டு, கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மிகவும் கோபமான நடிகை அனுஷ்கா, நயன்தாராவை என்னுடன் ஒப்பிட வேண்டாம். அவரவருக்கு தனி திறமை உள்ளது. அவரை என்னுடன் ஒப்பிடுவதோ, அல்ல அவருடன் என்னை ஒப்பிட்டு கூறுவது இருவருக்குமே மன வருத்தத்தை தரும் என கூறியுள்ளார்.
சமீப காலமாக வரலாற்று சிறப்பு மிக்க படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் அனுஷ்கா, அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பேன் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.