விட மாட்டாய்ங்க போலருக்கே... ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்...

By vinoth kumarFirst Published Nov 27, 2018, 4:48 PM IST
Highlights

இன்னும் இரு தினங்களில் ‘2.0’ ரிலீஸானவுடன் 90 சதவிகிதம் தியேட்டர்களில் இன்று இப்படம் கடைசி போடப்படவிருக்கும் ‘சர்கார்’ படம் குறித்த சர்ச்சைகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலமே வந்தபாடில்லை. சர்கார் படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்று அரசு தரப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு மதுரை உயர் நீதி மன்றக்கிளையில் கூறப்பட்ட தீர்ப்பு ஒன்றில் ‘சர்கார்’ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் முதல் டிக்கட்டுகள் சரியான விலையில்தான் விற்கப்பட்டதா என்பது குறித்த டி.சி.ஆர் [daily collection report] கோர்ட்டில் சமர்பிக்கப்படவேண்டும் என்று மதுரை,ராமநாதபுரம் ஏரியா தியேட்டர்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மேலும் தலைவலியைக்கொடுத்துள்ளது.

அவ்வழக்கில்,  அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யவும் , படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்தமைக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
 என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

click me!