maaran single : தனுஷ்.. சிஸ்டர் சென்டிமென்டுக்கு ரெடியா?..விரைவில் வெளியாகும் மாறன் சிங்கிள்..

Kanmani P   | Asianet News
Published : Feb 18, 2022, 09:08 PM ISTUpdated : Feb 18, 2022, 09:10 PM IST
maaran single : தனுஷ்.. சிஸ்டர் சென்டிமென்டுக்கு ரெடியா?..விரைவில் வெளியாகும் மாறன் சிங்கிள்..

சுருக்கம்

maaran single : தனுஷின் மாறன் படத்திலிருந்து அண்ணனா தாலாட்டும் பாடல் லிரிக் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக மாறன் (Maaran) படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

காதலர் தினத்தன்று மாறன் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறி உள்ளது. அந்த போஸ்டரில் தனுஷை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் தனுஷ் மாறன் என்கிற கதாபாத்திரத்திலும், மாளவிகா மோகனன் தாரா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷின் மாறன் படத்திலிருந்து அண்ணனா தாலாட்டும் பாடல் லிரிக் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது..அதில் மாறன் மற்றும் அவரது தங்கையின் பாச காட்சிகள் இடம்பெற்றுள்ளது...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்