
மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் மாணவி அனிதா. இவருடைய மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இளையதளபதி விஜய் மாணவி அனிதா வீட்டிற்கு சென்று அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செலுத்தி அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
தற்போது அனிதாவின் வீட்டிற்கு சென்ற விஜய் என்ன பேசினார் என்பதை அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கூறியுள்ளார்.
அவர் பேசும்போது, அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். நான் வந்தால் சூழ்நிலை சரியாக இருக்காது என்று வரவில்லை. எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள், அவள் இறந்துவிட்டாள், அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது.
அதனால், இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவும் என் தங்கை தான், என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க, என்று கூறி அவருடைய போன் நம்பரை கொடுத்தார். மேலும் எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் நான் செய்கிறேன், என கூறி என் தந்தையிடம் பணம் கொடுத்தார்.
அதோடு எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாக அனிதாவின் சகோதரர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.