இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

Published : Nov 19, 2018, 03:18 PM IST
இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

சுருக்கம்

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ராஜேஷ் குமார் தயாரிப்பில் உள்ள படத்தில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ராஜேஷ் குமார் தயாரிப்பில் உள்ள படத்தில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா இதுவரை நடித்திராத காதாப்பாத்திரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்
ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்