
பிரபல தொலைக்காட்சியில் போட்டியாளர்களாக அறிமுகம் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முன்னனி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விஜய், அஜித், சூர்யா ஆகிய நடிகர்களுக்கே சவால் விட்டு நடித்து வருகிறார்.
அதே போல, ஈரோடு மகேஷ், ரோபோ ஷங்கர், மாகாபா ஆனந்த் போன்ற பலர் திரைப்படங்களில் தங்களுடைய நடிப்பு திறமையை நிரூபிக்க களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து விட்டாலோ, அல்லது போட்டியாளராக கலந்து கொண்டால் நிச்சயம், தொகுப்பாளர், நடிகர் என பெரிய லெவலுக்கு வந்து விடலாம் என பலர் நினைப்பு மாறிவிட்டது.
ஆண் பிரபலங்களுக்கு இப்படி ஏறுமுகமாகவே இருக்க, இந்த தொலைக்காட்சியில் பணிபுரியும், தொகுப்பாளிகளுக்கு சினிமாக்களில் கூட வரவேற்பு அதிகமாக இருந்தாலும், ஏனோ குடும்ப வாழ்க்கைக்கு மட்டும் இவர்களுக்கு செட்டாகவில்லை என நினைக்க தோன்றுகிறது.
இந்த பிரபல தொலைக்காட்சியில் திருமணம் ஆன அத்தனை தொகுப்பாளிகளும் இன்னும் இளசுகள் போல் தான் சுற்றி வருகின்றனர்.
மேலும் தொகுப்பாளினி 'பாவனா' திருமணமாகி கணவரை விட்டு பல வருடங்களாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார், காரணம் கேட்டால் கணவர் வெளிநாட்டில் உள்ளார் என சிம்பிளாக கூறி தன்னுடைய கணவரை பற்றி பேச மறுக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, தொகுப்பாளினி ரம்யா, தன்னுடைய கணவரை திருமணமான செய்த ஒரே மாதத்தில் விவாகரத்து பெற முடிவு செய்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி 'டிடி', குடும்ப வாழ்க்கையில் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபகாலமாக பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டு வருகிறது.
இதே போல இதே தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான மைனா என்கிற "நந்தினி" திருமணமான இரண்டு மாதத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அவர் கணவர் கார்த்திக் இறந்தது அனைவரும்அறிந்தது தான்.
தொலைக்காட்சி வாயிலாக தங்களை மிக மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக்கொள்ளும் இவர்கள் வழக்கை உண்மையில் கலை இழந்து கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.