
பைனான்சியர் அன்புசெழியன் மிகவும் நல்லவர் என்றும்இ தனிப்பட்ட முறையில் அவரை ஒரு நல்ல தயாரிப்பாளராகத்தான் தான் பார்ப்பதாகவும் இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், திரைப்பட தயாரிப்பாளருமான அசோக்குமாருக்கு ஆதரவாக விஷால் உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் , பைனான்சியர் அன்புச்செழியன் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பார்த்திபன், இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன், விஷால் உள்ளிட்டோர் அன்புசெழியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அன்புசெழியன் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குநர் சுசீந்திரன், பைனான்சியர் அன்புசெழியனால் ஒட்டுமொத்த திரையுலகமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடிகர் அஜித், இயக்குநர் லிங்குசாமி போன்றோரும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினார். மேலும் எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் இமானை, அன்புசெழியன் மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சசிகுமாரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில் அன்புசெழியனுக்கு ஆதரவாக திரையுலகில் நடிகை தேவயானி, சுந்தர்.சி, சீனு ராமசாமி, மனோபாலா, பாலா போன்ற சினிமா பிரபலங்கள் களம் இறங்கியுள்ள நிலையில் இசையமைப்பாளர் இமான் அவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வெள்ளைகாரதுரை , மருது போன்ற திரைப்படங்களில் அவருடன் தான் வேலை செய்துள்ளேன் என்றும் அதன் தயாரிப்பாளராக அவரை தனக்குத் தெரியும் என்றும் அமான் தெரிவித்துள்ளார்.
பொதுவாவே அவர் நல்லவர். பாடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்குள் நல்ல நட்பு உண்டு. அவர் பற்றிய விமர்சங்கள் அதிகம் எழுகிறது. தனிப்பட்ட முறையில் நான் அன்பு சாரை நல்ல தயாரிப்பாளராகத் தான் பார்க்கின்றேன். என அந்த வீடியோ பதிவில் இமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.