’தமிழ் மொழியைக் கற்காமல் போனதற்காக வெட்கித் தலைகுனிகிறேன்’...சொல்றவர் யாருன்னு பாருங்க...

Published : Sep 30, 2019, 04:02 PM IST
’தமிழ் மொழியைக் கற்காமல் போனதற்காக வெட்கித் தலைகுனிகிறேன்’...சொல்றவர் யாருன்னு பாருங்க...

சுருக்கம்

ஐஐடி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, மாணவர்கள் மத்தியில் பேசிய போது தமிழ் குறித்து பேசினார். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் எனப் பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய போது, ’நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது’என்றும் தெரிவித்தார்.  

’சிறு வயதில் படித்தது ஊட்டி கான்வெண்டில்தான் என்றாலும் அங்கு முறையாகத் தமிழ் மொழியைக் கற்காமல் போனதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. தற்போது பிரதமர் மோடி ஐ.நா.சபையில் பேசிய பிறகுதான் எனக்கு தமிழின் அருமை தெரிந்தது’என்று தனது ட்விட்டர் பதிவுகளில் வருத்தம் தெரிவித்துள்ளார் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா.

தமிழ் உணர்வாளர்கள் சிலரின் சீரிய முயற்சிகளால் கீழடி போன்ற சில தடயங்களைக் கொண்டு உலகின் மற்ற அத்தனை மொழிகளும் தமிழின் காலடிக்குக் கீழேதான் என்று நிரூபணமாகிக்கொண்டுவரும் நிலையில், ஐஐடி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, மாணவர்கள் மத்தியில் பேசிய போது தமிழ் குறித்து பேசினார். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் எனப் பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய போது, ’நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது’என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் மோடியின் பேச்சைக்குறிப்பிட்டு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மகேந்திரா ட்வீட் செய்துள்ளார். அதில்,... ஐநாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி என்று தமிழைக் குறிப்பிட்டார். அதுவரையிலும் அதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்.

அந்த உண்மை எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும். நான் ஊட்டியில்உள்ள பள்ளியில் படித்தேன். அப்போது நான் தமிழை படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யப்பயன்படுத்தும் சில  கெட்ட வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது