
பாலிவுட் திரையுலகின் Big B என அமிதாப் பச்சனுக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
முதலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ்வர்யா ராய்க்கும், ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என கூறப்பட்டது. ஆனால் இரண்டாவது சோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் சில நாட்களுக்கு முன்பு பூரண நலம் பெற்று வீடு திரும்பினர்.
“எனது குடும்பத்தினர் குணமடைய வேண்டி எல்லோரும் அன்பும் அக்கறையும் செலுத்தினீர்கள். பிரார்த்தனை செய்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கடன்பட்டு இருக்கிறோம். உங்கள் அன்பை பார்த்து உணர்ச்சி பெருக்கில் ஆழ்ந்து போனேன். இதயம் கரைந்தேன். அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உங்கள் நலனுக்காக எப்போதும் பிரார்த்திப்பேன். எல்லோரும் நலமாக, பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுளார். கையெடுத்து கும்பிடுவதுபோன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 23 நாட்களாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிதாப் பச்சனுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என வந்துள்ளது. இதையடுத்து அமிதாப் பச்சன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதை அவருடைய மகன் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனும் தான் வீடு திரும்பிவிட்ட நல்ல செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.