பிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய அமலா பால்..!

 
Published : Dec 06, 2017, 05:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
பிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய அமலா பால்..!

சுருக்கம்

amalapaul reject the famous actor movie

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, நடிகைகளுக்கு திருமணம் நடந்து விட்டால் அவர்களை கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க வைப்பது அரிது எனக் கூறலாம். இப்படி பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்குப் பின் அண்ணி, அக்கா போன்ற கதாபாட்திங்களில் நடித்துள்ளனர்.

இந்த விஷயத்தைப் பொறுத்த வரை அமலாபாலுக்கு அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். இவருக்கு திருமணம் ஆகி, விவாகரத்து ஆன பின்பும் கூட இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில மாதத்திற்கு முன் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படமும், அதைத் தொடர்து கடந்த வாரம் வெளியான திருட்டு பயலே 2'  திரைப்படமும் அமலாபாலுக்கு வெற்றிப் படமாக அமைந்ததால் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். 

இந்நிலையில் அமலாபால் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியாக கமிட் ஆகி இருந்தார். கேரளாவில் 1980 களில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தை பிரதிபலிக்கும்படியாக இப்படத்தின் கதை அமைந்திருந்தது... 

தற்போது இந்தப் படத்தில் இருந்து திடீர் என விலகியுள்ளார் அமலபால்.  மேலும் இவருக்கு பதில், இந்தப் படத்தில் பிரியா ஆனந்த் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் திடீர் என இந்தப் படத்தில் இருந்து அமலாபால் விலக என்ன காரணம் என இது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்