இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்...! முக்கிய தகவலை வெளியிட்ட குடும்பத்தினர்...!

 
Published : Jul 07, 2018, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்...! முக்கிய தகவலை வெளியிட்ட குடும்பத்தினர்...!

சுருக்கம்

amalapaul husband director vijay second marriage

விஜய், அஜித், விக்ரம், பிரபுதேவா என முன்னணி நடிகர்களை வைத்து, வித்தியாசமான கதை களத்தோடு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் விஜய். 

இவர் நடிகை அமலாபாலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பின், விஜய் படம் இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கினார். அதே போல் அமலாபால் திரைப்படம் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கினார். 

இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், இவருக்கு இவருடைய பெற்றோர் தீவிரமாக பெண் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் விஜயின் குடும்பத்தினர் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர். மேலும் தற்போது விஜய் பிரபுதேவா நடித்து வரும் படத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் இரண்டாவது திருமணம் குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை என்கிற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி