கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் வெளிவந்த அத்தனை படங்களையும் அலசி ஆராய்ந்த ஒரு தனியார் இணையதளம் 100 நடசத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்படியலில் ‘மரியான்’தனுஷ் 19 வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அமலா பால் 89 வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா பால், இப்பட்டியலில் ஒரு இடம் பிடித்திருப்பது த்ரில்லிங்காக இருக்கிறது’என்று பதிவிட்டிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த 100 நடிகர்கள் என்று தனியார் இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியலில் ‘ஆடை’பட நடிப்புக்காக 89 வது டம் பிடித்துள்ள அமலாபால் அச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த 100 சிறந்த நட்சத்திரங்கள் பட்டியலில் அஜீத்,விஜய் ஆகிய இருவர் பெயருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் வெளிவந்த அத்தனை படங்களையும் அலசி ஆராய்ந்த ஒரு தனியார் இணையதளம் 100 நடசத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்படியலில் ‘மரியான்’தனுஷ் 19 வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அமலா பால் 89 வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா பால், இப்பட்டியலில் ஒரு இடம் பிடித்திருப்பது த்ரில்லிங்காக இருக்கிறது’என்று பதிவிட்டிருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க அமலா பாலின் கைவசம் தற்போது இருக்கும் ஒரே படமான ‘அதோ அந்தப் பறவை போல’படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அமலாவுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் நடிப்பில் வினோத் கே.ஆர். இயக்கியுள்ள படம் அதோ அந்த பறவை போல. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் டிசம்பர் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 அன்று ரஜினி நடித்த தர்பார் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு இரு வாரங்களுக்கு முன்பு இப்படம் வெளியாவது சரியாக இருக்கும் என எண்ணி இந்தத் தேதியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்படமும் சரியாக ஓடாவிட்டால் அவர் மூட்டை முடிச்சுகளுடன் கேரளாவுக்குக் கிளம்பவேண்டியதுதான்.