
பிரபல திரைப்பட நடிகையான அமலா பால் பல படங்களில் நடித்து பிரபலமானவர்.இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் தனியாக வசித்து வரும் அமலா பால், மேலும் பல பல புது படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
சொகுசான வாழ்கை வாழ்ந்து வரும் அவர்,சமீபத்தில் போலி முகவரி கொடுத்து கார் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் ரூ. 1.12 கோடிக்கு எஸ். கிளாஸ் பென்ஸ் கார் அமலாபால் வாங்கினார்.
போலி முகவரி மூலம் புதுச்சேரியில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள வாகன சட்டப்படி அம்மாநிலத்திலும் அமலாபால் முறைப்படி வரி செலுத்தவில்லையாம்
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலாபாலுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவின்றன.
அதாவது கார் வாங்கியது ஒரு இடம்,ரிஜிஸ்டர் செய்தது ஒரு இடம், இதில் போலி முகர்வரி வேறு ....மேலும் சரியான வரி செலுத்தவில்லை ..இது போன்ற பல காரணங்களால் அமலா பால் சிக்கலில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த தகவலால் அமலாபால் அடுத்த என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிக்குவாரா? அல்லது குற்றத்திலிருந்து விடுபட என்ன நடவடிக்கை
டுத்து வருகிறார் என சினி உலகம் அரை ஆவலாக உற்று நோக்குகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.