நயன்தாராவின் அறம் சாயலில் நடிக்கிறேன்... அமலாபால் ஓபன் டாக்!

 
Published : Nov 19, 2017, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
நயன்தாராவின் அறம் சாயலில் நடிக்கிறேன்... அமலாபால் ஓபன் டாக்!

சுருக்கம்

amala paul acting aram type movie

நடிகை அமலாபால், அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம்  ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் நடித்த அனுபவம் பற்றி  தற்போது அமலாபால் மனம் திறந்து கூறியுள்ளர்.

 ‘‘இந்த படத்தில் காரைக்குடி பெண்ணாக நடித்திருக்கிறேன். மூக்குத்தி, பாவாடை தாவணி, புடவை அணிந்து வருகிறேன். குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் படமாக சசிகணேசன் இதை இயக்கி இருக்கிறார். எப்போதும் வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் படமாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இன்றைய காலத்தை சிறந்ததாக கருதுகிறேன். ஒரு உதவி இயக்குனரை போல் எல்லா வேலைகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கதை, படத்தொகுப்பு, இயக்கம் எல்லாவற்றையும் கவனமாக பார்ப்பேன். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ கலகலப்பான படம். இதில் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.

 இந்த படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அரவிந்சாமி. நிறைய வி‌ஷயங்கள் குறித்து அவரிடம் கலந்து பேசுவேன். இந்த படத்திற்காக சொந்த குரலில் பேசியிருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் தற்போது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. சமீபத்தில் நயன்தாரா நடித்த அறம் படத்திற்கும் ரசிகர்கள் பலர் ஆதரவு கொடுத்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் தானும் நயன்தாரா நடித்த அறம் படத்தின் சாயலில் 'அதோ அந்த பறவை' என்ற படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்