அஜித் படங்களிலேயே நம்பர் 1 சூப்பர் வசூல் இதுதான் !! விநியோகஸ்தர்கள் கொண்டாடும் விஸ்வாசம் !!

By Selvanayagam PFirst Published Jan 17, 2019, 9:01 AM IST
Highlights

நடிகர் அஜித்தின் சினிமா பயணத்தில் பெஸ்ட் படம் 'விஸ்வாசம்' தான் என்றும், அந்தப் படத்துக்கு நாளுக்கு நாள் பொது மக்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படை எடுத்து வருவதால் விநியோகஸ்தர்கள் கலெக்ஷனை அள்ளி வருகின்றனர். அஜித் படங்களிலேயே அதிக வசூல் விஸ்வாசம் படம் தான் என்று டிஸ்ட்ரிபியூட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம் திரைப்படத்தை  சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. .ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ரஜினி நடித்த பேட்ட  படத்துடன் வெளியானதால், விஸ்வாசம்  படத்துடன் வசூல் எப்படியிருக்கும் என்று முதலில் விநியோகஸ்தர்கள் பயந்தார்கள். ஆனால், இரண்டு படங்களுமே இதுவரை நல்ல வசூல் செய்து வருவதாக தெரிகிறது. தற்போது எங்கள் படம் தான் சூப்பர் வசூல் என இரு தரப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பேட்ட படத்தைப் பொறுத்த வரை நல்ல வசூல் என்றாலும், நிச்சயமாக நம்பர் 1 ஆக இருப்பது விஸ்வாசம் திரைப்படம்தான். செம வசூலால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தின்  திருச்சி - தஞ்சாவூர் ஏரியா விநியோகஸ்தர் சக்திவேல் ,படம் எப்படி வசூலை அள்ளுகிறது என்பதை புட்டு புட்டு வைத்தார்.

மாஸ் ஹீரோ அஜித், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள விஸ்வாசம் படத்தில் அவர் நடித்திருப்பது சூப்பர் என்பது போக  அஜித் - சிவா காம்பினேஷன் படத்துக்கு பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுதித்தியிருந்ததாக தெரிவித்தார். 

இப்படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் பாருங்கள் என்று தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் தெரிவித்திருந்தது தற்போது அப்படியே நடப்பதாக சக்தி வேல் கூறினார்.

இதுவரை அஜித் நடிப்பில் வெளியான படங்களின் வசூலை நாள் கணக்காக எடுத்துப் பார்த்தால், அனைத்துமே ஒரே ரேஞ்சில் இருக்கும். இப்படம் ஒவ்வொரு நாளின் வசூலுமே ஏற்றமாக இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் வரவேற்பு கூடிக் கொண்டே இருக்கிறது. ஜனவரி 15 மற்றும் 16  ஆகிய தேதிகளில் பயங்கரமான வரவேற்பாக இருந்தது என கூறினார். அவருடைய நடிப்பில் வந்த படங்களில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டராக 'விஸ்வாசம்' தான்  என்றும் சக்திவேல் கூறினார்..

ரஜினி சாருடைய 'பேட்ட' படத்துடன் வந்துள்ளது 'விஸ்வாசம்'. அப்படியிருந்துமே தமிழக வசூலில் ஷேராக 55 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை வரும் என நம்புகிறேன். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில் 70 கோடி முதல் 80 கோடி வரை ஷேராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒவ்வொரு படத்தின் வசூலைப் பார்க்கும் போதும், ஏன் இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்தது என்று எண்ணுவார்கள். அது போல் அல்லாமல் வரும் காலத்தில் சூப்பர் வசூல், மக்களிடையே வரவேற்பு இரண்டும் சேர்த்து 'விஸ்வாசம்' மாதிரி ஒரு படம் பண்ணனும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மக்களுடைய மனதில் படத்தின் கதைகளம் மூலம் குடிகொண்டு விட்டார்கள் அஜித் - சிவா கூட்டணி என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எனக்கு இந்த வாரத்தில் நான் போட்ட பணம் வந்துவிட்டது. அடுத்த வாரத்திலிருந்து லாபம் தான். எனக்கு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவருமே பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறோம் என சத்திவேல் மகிழ்ச்சிபொங்க தெரிவித்தார்.

click me!