
தல அஜித்தின் ஆலோசனையின் பெயரில் ஆளில்லா விமானம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலாஜி மாணவர்கள்.
தல அஜித் நடிகர் என்பதையும் தாண்டி, ஆக்கப்பூர்வமான பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக பைக் ரேஸ், போட்டோ கிராபி, கார் ரேஸ், சமையல் என அவருக்கு பிடித்த வற்றை தேர்வு செய்து அதில் கில்லி என நிரூபிப்பார்.
இந்நிலையில் சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் இணைந்து ஆளில்லா விமானம் ஒன்றை தயாரிக்க தக்ஷா என்னும் புதிய டீம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு அஜித் முக்கிய ஆலோசகராக செயல்பட்டார்.
அஜித்தின் ஆலோசனையுடன் உருவான இந்த ஆளில்லா விமானம் 111 பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் அஜித் தலைமையிலான தக்ஷா குழுவை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கி இருந்த ஆளில்லா விமானம், சரியாக 6 மணிநேரம் 7 நிமிடம் விண்ணில் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா விமானம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
இது போன்ற ஆளில்லா விமானங்கள், இயற்கை பேரிடர்களான, வெள்ளம், சுனாமியின் போது உணவு, மருந்து உள்ளிட்ட கிலோ எடையை கொண்ட பொருட்களை இந்த ஆள்ளில்லா விமானங்கள் எடுத்து செல்ல உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.