ரஜினியை அவரது கோட்டையிலேயே ஓடஓட தெறிக்க விட்ட அஜித்... முன்னே பின்னே என்று ரகளை கிளப்பும் வசூல் ரேஸ்..!!

By Vishnu PriyaFirst Published Jan 12, 2019, 2:31 PM IST
Highlights

சிறப்பான மற்றும் தரமான சம்பவங்களை செம்ம சாதனைகளாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் தல! என்று தாறுமாறாக சந்தோஷிக்கிறார்கள். யார் அஜித்தின் ரசிகர்கள்தானே இதிலென்ன ஆச்சரியம்? என்று கேட்டால்...இல்லை! விஸ்வாசம் படத்தை வாங்கி திரையிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்! என்று பதில் வந்து விழுகிறது.

சிறப்பான மற்றும் தரமான சம்பவங்களை செம்ம சாதனைகளாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் தல! என்று தாறுமாறாக சந்தோஷிக்கிறார்கள். யார் அஜித்தின் ரசிகர்கள்தானே இதிலென்ன ஆச்சரியம்? என்று கேட்டால்...இல்லை! விஸ்வாசம் படத்தை வாங்கி திரையிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்! என்று பதில் வந்து விழுகிறது. 

ஆம்! ஓப்பனின் கிங்கான அஜித் இந்தப் படத்தின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாகிவிட்டார்! என்றே புள்ளிவிபரங்களுடன் தகவல்கள் வந்து விழுகின்றன. எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்க ஹிட்டாம் படம். தியேட்டர்களில் குடும்ப ஆடியன்ஸ் வந்து குவிவதால், முதல் ஷோவுக்கு இருந்த கெத்தும், மாஸும் இன்னும் சற்றும் குறையாமல் சென்று கொண்டே இருக்கிறது! என்கிறார்கள். 

அதேவேளையில் ரஜினியின் ‘பேட்ட’ படமொன்றும் ஆகப்பெரிய சறுக்கலை சந்திக்கவில்லை! என்றே சொல்கிறார்கள். விஸ்வாசத்தை விட பத்து சதவீதம் குறைவான குடும்பங்கள் அந்தப் படத்தின் கவுண்டரை அணுகுகின்றனராம். ரஜினியின் பழைய ஸ்டைல் மீண்டிருப்பதால் புத்துணர்ச்சியோடு குடும்பங்கள் வந்து உட்காருகிறார்கள்! என்று தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ்...தியேட்டர்களில் நடத்திய சர்வேவை வைத்து பேசுகிறது.

 

விஸ்வாசம் படத்தை அதன் தயாரிப்பு தரப்போ, அஜித்தோ தூக்கிப் பிடிக்கவில்லை பெரிதாக. ஒரு ஷோ பார்த்தவர்களே அதற்கு அடுத்த பத்து ஷோக்களுக்கான ஆடியன்ஸை தங்களின் வாய்மொழியாகவே இழுத்து வருகிறார்கள். ‘அஜித் படம் பார்த்துட்டேன், விஸ்வாசம் செம்ம ஹிட்!’ அப்படின்னு சொல்றதே ஒரு கெத்தா இருக்குது. அதனாலதான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலி எல்லாரையும் இந்தப் படத்த பார்க்கச் சொல்லி ரெக்கமெண்ட் பண்றேன்! என்று குதூகழிக்கிறார்கள் இளம் பெண்கள்.  

ஆம் தல!-க்கு தாறுமாறான ரசிகைகள் பெருகியிருக்கிறார்கள் இந்தப் படத்தின் மூலமாக. இது மட்டுமல்ல, தமிழ்நாட்டில்தான் ரஜினிக்கும், அஜித்துக்கும் இடையில் ரேஸ் நெருக்கம் நெருக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். ஆனால் தமிழகம் தாண்டிய பகுதிகளில் விஸ்வாசம்தான் வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு வெளுத்து வாங்குகிறதாம் வசூல், மாஸ், வரவேற்பில். 

ரஜினியின் சொந்த மண்ணான கர்நாடகாவில் நிலைமை  என்ன? என்று உற்றுக் கவனித்த சினிமா விமர்சகர்களுக்கு செம்ம ஆச்சர்யம். காரணம்?...அங்கே அஜித்துக்குதான் அமோக ஆதரவாம். மால்களில்  உள்ள தியேட்டர்களில்  பேட்ட படத்துக்கு டிக்கெட் வாங்குவதற்கான கூட்டம் சற்றே காற்று வாங்க, விஸ்வாசத்துக்கோ அடுத்த மூன்று நான்கு ஷோக்களுக்கே மூச்சு முட்ட முட்ட ஹவுஸ்ஃபுல் போடு தொங்குகிறது! என்கிறார்கள்.

  

ரஜினி மீது காவிரி உள்ளிட்ட அரசியல் ரீதியாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட மாஸ் ஹீரோ எனும் முறையில் அவரை கொண்டாடுவார்கள் பெங்களூருவாசிகள் உள்ளிட்ட கர்நாடக மக்கள். ஆனால், அஜித்தோ அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பதே லேட்டஸ்ட் நிலவரம். இதை சினிமா விமர்சகர்கள்...’ரஜினியை அவரோட கோட்டையிலேயே அஜித் ஓட ஓட தெறிக்கவிடுறார் வசூல்ல!’ என்கிறார்கள்.

click me!