விநாயக், காந்திபாபு மாதிரி டெரரா ஒரு கதை சொன்ன வினோத்திடம் என்ன சொன்னார் அஜித்?

By sathish kFirst Published Jun 13, 2019, 12:58 PM IST
Highlights

மாஸ் நடிகர் அஜித் இந்த படத்தில் நடிக்க காரணம் என்ன? பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் "நேர்கொண்ட பார்வை" படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத்.

மாஸ் நடிகர் அஜித் இந்த படத்தில் நடிக்க காரணம் என்ன? பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் "நேர்கொண்ட பார்வை" படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத்.

அஜித்தின் மாஸ் ரசிகர்கள் பட்டாளத்தை மனதில் வைத்து சதுரங்க வேட்டை, ஹிட்டுக்கு அப்புறமா மங்காத்தா விநாயக், சதுரங்கவேட்டை காந்திபாபு மாதிரியே நெகட்டிவ் ஷேடுல தல அஜித்க்காக ஒரு கதை ரெடி வெச்சிருந்தாராம் வினோத். அதுக்கு அப்புறமா ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வரை வெய்ட் பண்ண அவருக்கு அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுச்சாம்.

அப்போ அந்த நெகட்டிவ் கதையை சொன்னப்போ, நெகட்டிவ் கேரக்டர் பண்ணின வரை போதும் வினோத். இனி நான் பண்ணப்போற படங்கள் மூலமா மக்களுக்கு நம்பிக்கையையும் கனவையும்தான் விதைக்கணும்னு நினைக்கிறேன்னு தெளிவா சொன்னாராம் தல. 

தொடர்ந்து வினோத்திடம் பேசிய அஜித், பெண்களுக்கெதிரா நடக்கிற விஷயங்கள் அதிர்ச்சியா இருக்கு. பெண்களைப் பற்றிய புரிதல்ல நம்ம சமூகம் ரொம்ப பலவீனமா இருக்கு. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நம்ம நாட்டுல  இப்போது அன்றாட நிகழ்வாகவே மாறிடுச்சு.  இப்போ நெனச்சாலும் எனக்கேகூட என்மேல வருத்தமிருக்கு.

நானும் ஆரம்பகாலத்தில பெண்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிற படங்களில் நடிச்சிருக்கேன். அப்போ பண்ணின தப்பை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் வினோத். சோ இதுதான் என்னோட அடுத்த படம். அதுல நீங்க இருந்தீங்கனா நான் ஹேப்பின்னு சொன்னாராம். 

பிங்க் படத்தின் எமோஷனை அப்படியே என்னால் கொண்டுவர முடியுமான்னு யோசிச்ச வினோத்திற்குப் பார்த்த அஜித்  கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னாராம்...

திரும்பவும் ஒருநாள் அஜித்தை  சந்திச்ச வினோத், இந்தப் படத்தை ஒரு பெண் இயக்குநர் பண்ணினா நல்லா இருக்கும் சார்னு சொன்னாராம், அதற்கு அஜித்தோ தப்பு வினோத். ஒரு பெண், அவங்களுக்கு சாதகமா பேசுறாங்கன்னு மக்கள் ஈஸியா கடந்து போயிடுவாங்க. இது பெண்களுக்கான படம் கிடையாது. இது பசங்களுக்கான படம். இதை ஒரு ஆண் இயக்குநர் பண்றது தான் சரி’ன்னு அழுத்தமா சொன்னாராம். அந்தத் தெளிவு தந்த உற்சாகம் தான் விநாயக், காந்திபாபு வேண்டாம், பெண்களுக்காக போராடும் இந்த நீதி தேவனுக்காக இப்படியான ஒரு படத்தை ரீமேக் செஞ்சாராம், அதுமட்டுமல்லாமல் தலயை பக்கம் பக்கமா எமோஷனல் & ஆக்ரோஷமாக டயலாக் பேசவிட்டுள்ளாராம்.

தல ரியலி தி கிரேட்! 

click me!