அஜித்தின் அடுத்த படமும் ஹாலிவுட் தரத்திலா?

 
Published : Sep 13, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
அஜித்தின் அடுத்த படமும் ஹாலிவுட் தரத்திலா?

சுருக்கம்

Ajith next movie like Hollywood type?

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் இணைந்து பணியாற்றினார் அஜித். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்திலேயே வேதாளம் படித்தில் நடித்தார். தொடர்ந்து, தற்போது வெளியாகி வசூல் சாதனை படைத்தது வரும் விவேகம் படத்திலும் நடித்தார்.

விவேகம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குக் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஓய்வில் இருந்து வருகிறார் அஜித். தற்போது, அவர் தனது 58 வது படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். அந்தப் படத்தையும் சிவா இயக்கத்திலேயே நடிக்கலாம் என்று அவர் தீர்மானித்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தின் கதை என்பதாக, வலைத் தளங்களில் ஒரு கதை உலா வரத்தொடங்கியுள்ளது. அதில் சிவா இயக்கும் அடுத்த படம் 'ஸ்பேஸ்" சம்மந்தமான கதை என்றும், இந்தப் படத்தையும் ஹாலிவுட் தரத்தில் சிவா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்தக் கதை குறித்து சிவா மற்றும் அஜித் தரப்பில் இருந்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?