அஜித் "என் நண்பர்"... விஜய் "அற்புதம்"... டுவிட்டரில் புகழ்ந்த பலிவுட் ஹிரோ...!! தனுஷைப் பற்றியும் கருத்து கூறினார்...!!

Published : Oct 08, 2019, 05:48 PM IST
அஜித் "என் நண்பர்"... விஜய் "அற்புதம்"... டுவிட்டரில் புகழ்ந்த பலிவுட் ஹிரோ...!!   தனுஷைப் பற்றியும் கருத்து கூறினார்...!!

சுருக்கம்

அந்த ஹேஷ்டேக்கை பின் தொடர்ந்த தமிழ் ரசிகர்கள் தல அஜித்தை பற்றி ஒரு வரியில் பதில் சொல்ல ஷாருக்கானிடம் கோட்டுள்ளனர். அதற்கு அவர் ’அஜித் என் நண்பர்’ என்று  பதிலளித்துள்ளார்.  அதேபோல் விஜய் ரசிகர் ஷாருக்கான் இடம் தளபதி விஜய் பற்றி ஒரு வரியில் சொல்லுமாறு கேட்டுள்ளனர்.  

விஜய்,அஜீத் மற்றும் தனுஷ் , ஆகியோரைப் பற்றி  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ள கருத்து சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது, தமிழகத்தின் முக்கிய மூன்று  சினிமாக் கதாநாயகர்கள் குறித்து  ஷாருக்கான் கூறியதை  ஆராயும் ரசிகர்களால் அவரின்  ஹேஷ்டேக் டெர்ண்டாகி வருகிறது.

பாலிவுட்டின்  முன்னணி நடிகராக வலம் வரும்  ஷாருக்கான்,  டுவிட்டரில்  #AskSRK ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடிவருகிறார் இது தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. பலதரப்பட்டவர்கள் ஷாருக்கானிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் அளிக்கும் பதில்கள் சுவாரசியமாகவும் ரசிக்கும் வகையிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த ஹேஷ்டேக்கை பின் தொடர்ந்த தமிழ் ரசிகர்கள் தல அஜித்தை பற்றி ஒரு வரியில் பதில் சொல்ல ஷாருக்கானிடம் கோட்டுள்ளனர். அதற்கு அவர் ’அஜித் என் நண்பர்’என்று பதிலளித்துள்ளார்.

 

அதேபோல் விஜய் ரசிகர் ஷாருக்கான் இடம் தளபதி விஜய் பற்றி ஒரு வரியில் சொல்லுமாறு கேட்டுள்ளனர்.  அதற்கு பதிலளித்த ஷாருக்கான்   ’அற்புதம்’ என கூறியுள்ளார்.  அதனைத் தொடர்ந்து  ஷாருக்கானை  விடாமல் விரட்டிய  தனுஷ் ராசிகர்கள் தனுஷை பற்றி கருத்து கேட்டதற்கு ’நான் நேசிக்கும் நபர் தனுஷ்’ என தெரிவித்துள்ளார் தொடர்ந்து பலர் பல சுவாரசியமான

 

கேள்விகளை பதிவிட்டு பதிலைப் பெற்று வரும்   நிலையில் எதிர்காலத்தில் தமிழ் படத்தில்  நடிக்க திட்டம் உள்ளதா என்று ஒரு ரசிகர் கேட்க ‘ஆம் தமிழ் என்னால் நன்கு புரிந்து கொள்ள முடியும்’ என்று  அவர் பதில் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் தங்களின் ஆதர்ஷ கதாநாயகர்கள் பற்றி பாசிட்டிவாக தெரிவித்துள்ள கருத்தால் விஜய் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்
'என் வகுப்புத் தோழர்', நண்பன் ஸ்ரீனிவாசன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்