
'தல' அஜித்தின் நடிப்பை பலர் விமர்சனம் செய்தாலும் அவரது மனித நேயத்தை இதுவரை அவரது எதிரிகள் உள்பட யாரும் தவறாக விமர்சனம் செய்ததே இல்லை. அந்த அளவுக்கு அவரது உதவிகள் மனப்பூர்வமாக இருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் அவருடைய செய்கை ஒன்று கோலிவுட்டில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் வீட்டில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் அவர் வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும் அவரது வீட்டிற்கும் அவரது பணியாளர்கள் வீட்டிற்கும் உள்ள தூரம் 10 கிமீ என்பதால் அவர்களை பணிக்கு அழைத்து வரவும் கொண்டு போய் விடவும் வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வேன் வருவதற்கு ஒருசில நிமிடங்கள் காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் அஜித்திடம் சாரி' கேட்ட பணியாளர்கள் தாமதத்திற்கான காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் சரியாக தூங்கவில்லை என்றும் அதனால்தான் தாமதம் ஆகியதாகவும் கூறினர்.
உடனே சம்பந்தப்பட்டவர்களை அழைத்த அஜித், பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் இன்வெர்ட்டர் பொருத்த சொன்னதாகவும், அதிலும் தனது வீட்டில் உள்ள பிராண்ட் இன்வர்ட்டரையே பணியாளர்கள் வீட்டிலும் பொருத்த உத்தரவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அஜித் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றும் வெளியாகிற போது அவரது மனிதநேயம் உச்சத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.