அஜித்தைவிட ரஜினிக்கு தான் பெரிய மார்க்கெட்!! ஆனா மாஸ் ஓப்பனிங் தல படத்துக்கு தான்...

Published : Dec 26, 2018, 11:20 AM ISTUpdated : Dec 26, 2018, 11:25 AM IST
அஜித்தைவிட ரஜினிக்கு தான் பெரிய மார்க்கெட்!! ஆனா மாஸ் ஓப்பனிங் தல படத்துக்கு தான்...

சுருக்கம்

அஜித்தைவிட பெரிய மார்க்கெட் ரஜினிக்கு இருப்பது உண்மை என்றாலும், சமூக வலைதளங்களைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்கள் தான் டாப். மாஸ் ஓப்பனிங் இருப்பதென்னவோ அஜித்துக்கு தான்.

தமிழ் சினிமாவில் எப்போது புதிய டிரெண்டை உருவாக்கும் அஜித், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாதவாறு  தன் ரூட்டை மாற்றியவர். பாடல் வெளியீட்டு விழா, சக்ஸஸ் பார்ட்டி என எதையும் தன்னுடைய படத்திற்கு வைத்ததில்லை, அதுமட்டுமா, படத்தை பிரமோட் செய்யவும் இறங்கியதில்லை. காரணம் அந்த படத்தை ரசிகர்களே மொத்த  பிரமோஷனையும் செய்துவிடுவார்கள். சொல்லப்போனால் போஸ்டர் முதற்கொண்டு அவர்களே தியேட்டர் பெயர் போட்டு ஊர் முழுவதும் ஒட்டிவிடுவார்கள். அவர்களிடம் தேதி சொன்னாலே போதும், மேலே சொன்ன அனைத்தும் நடந்துவிடும். 

படப்பிடிப்பைத் தொடங்கியபோதே 2019 பொங்கல் தேதியை டார்கெட் செய்துவிட்டது சத்யஜோதி ஃபிலிம்ஸ். ஆனால், சன் பிக்சர்ஸ் குழுமம் அடாவடியாக பொங்கல் ரிலீஸாக பேட்ட படத்தை அறிவித்தது. போட்டியிட்டு இரு பக்கமும் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க அஜித் திரைப்படம் பின்வாங்கும் என்றே  சொல்லப்பட்டது. ஆனால், அஜித் பட டீமோ யார் படம் வேணும்னாலும் வரட்டும், படம் நல்ல இருந்தால் தான் மக்கள் பார்ப்பாங்க, நாம ரசிகர்களை மட்டும் குறி வைத்து இந்த படத்தை எடுக்கல, நம்ம மெயின் டார்க்கெட்டே ஃபேமிலி ஆடியன்ஸ் தான் அதனால தில்லா நம்ம படத்தை ரிலீஸ் பண்ணலாம், என உறுதியாக பொங்கல் ரிலீசிலிருந்து பின்வாங்கவில்லை விஸ்வாசம் டீம்.

விஸ்வாசம் படக்குழுவின் இந்த ஆக்ஷன் அனவுன்ஸ், பேட்ட டீமை பேதி புடுங்க வைத்ததென்றே சொல்லலாம். ஆமாம், படத்தில் மோஷன் போஸ்டர் தொடங்கி பாடல்கள் என சமூக வலை தளங்களில் தாறுமாறாக அடித்து துவம்சம் செய்தது.

இதனையடுத்து நேற்று முன்தினமே ரிலீஸாகியிருக்கவேண்டிய விஸ்வாசம் படத்தின் டீசர், வெளிவராமல் போனதற்குக் காரணம் தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் அதிகாரப் போர். கடந்தமுறை திடுமென பட ரிலீஸை தள்ளி வைத்ததால் இம்முறை என்ன நடக்கிறதெனப் பார்ப்பதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தாமதித்த இடைவெளியின் சென்சார் ரிசல்ட்டை வெளியிட்டு, டிரெய்லர் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டது சன் பிக்சர்ஸ்.

அஜித்தைவிட பெரிய மார்க்கெட் ரஜினிக்கு இருப்பது உண்மை என்றாலும், சமூக வலைதளங்களைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்கள் தான் டாப். மாஸ் ஓப்பனிங் இருப்பதென்னவோ அஜித்துக்கு தான்.  அஜித் பெயரில் டிரெண்டிங் செய்யும் அவர்களுக்கு டீசர்/டிரெய்லர் வருவது ஒரு வரம் போல. எனவே தான் பேட்ட தாமதித்தது. ஆனால், சென்சார் வரை பெற்றுவிட்டதாலும், சொன்னபடி 24ஆம் தேதியை விஸ்வாசம் தவறவிட்டதாலும் தைரியமாக செல்லலாம் என பேட்ட டிரெய்லர் தேதியை அறிவித்துவிட்டனர். 

டிசம்பர் 24ஆம் தேதியைத் தவறவிட்ட விஸ்வாசம் டீமுக்கு அடுத்ததாகக் கிடைத்திருக்கும் தேதி ஜனவரி 1. ஆரம்பத்திலிருந்தே ஜனவரி 1 என்ற தேதியை, ஒரு வாய்ப்பாக வைத்திருந்ததால் தங்களது வேலைகளை 1ஆம் தேதியை நோக்கி திருப்பிவிட்டுவிட்டனர். மூன்று நாளில் ரிலீஸாகிறது. இரண்டு நாளில் ரிலீஸாகிறது, ஒரு நாள் காத்திருங்கள் என தொடர்ந்து ரிலீஸ் செய்வதற்கு போஸ்டர்களை விஸ்வாசம் டீம் தயார் செய்துவருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!