அஜித்தை பார்த்து கடவுளே கடவுளே முழக்கம்..! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

Published : Oct 09, 2019, 01:38 PM IST
அஜித்தை பார்த்து  கடவுளே கடவுளே முழக்கம்..! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

சுருக்கம்

விசுவாசம் நேர்கொண்ட பார்வை படத்தில் தாடி வைத்துக்கொண்டு வெள்ளை நிற தலைமுடியுடன் இயற்கையாக இருந்தார்.

அஜித்தை பார்த்து  கடவுளே கடவுளே முழக்கம்..! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

அஜித் சமீபத்தில் நடித்து வெளியான விஸ்வாசம், நேர்கொண்டபார்வை படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது தல 60 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித் எவ்வாறு தோற்றம் அளிப்பார் என்பது குறித்த ஓர் புகைப்படம் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. தலைமுடிக்கு ஹேர் டை அடித்து இளமையாக தோற்றம் அளிக்கிறார்.

விசுவாசம் நேர்கொண்ட பார்வை படத்தில் தாடி வைத்துக்கொண்டு வெள்ளை நிற தலைமுடியுடன் இயற்கையாக இருந்தார். ஆனால் தல 60 படத்தில் மிகவும் இளமையாக  தோற்றமளிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் மீண்டும் தல 60 படத்தை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்த படத்தில் அஜித் இருவேடங்களில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்து வருவதாகவும், தினமும் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தில் கார் ரேஸர் மற்றும் போலீஸ் அதிகாரியாக இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

சமீபத்தில் அஜித் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள சென்று இருந்தார். அப்போது விமான நிலையம் முதல் துப்பாக்கிய சுடும் இடம் வரை ரசிகர்கள் சூழ்ந்த வண்ணம் போட்டோ எடுத்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர். 

இந்த நிலையால் சென்னை திருப்பிய அஜித்தை பார்த்தவுடன் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது.அப்போது ஒரு ரசிகர் அஜித்தை பார்த்து கடவுளே கடவுளே என கோஷமிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களும் கடவுளே கடவுகளே என கோஷமிட்டனர் 

இதில் கடுப்பான அஜித் புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு சற்று கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் உங்களுக்காக...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
குணசேகரனின் கோர முகம்; ஜனனியை தீர்த்துக்கட்ட நடக்கும் சதி; உயிர்ப் பயத்தில் ஈஸ்வரி குடும்பம்? எதிர்நீச்சல் அப்டேட்!