நயன்தாராவையும் விட்டு வைக்காத அஜித் ரசிகர்கள்... ஏன் இந்த கொலவெறி?... வைரல் வீடியோ....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 17, 2020, 12:37 PM IST
நயன்தாராவையும் விட்டு வைக்காத அஜித் ரசிகர்கள்... ஏன் இந்த கொலவெறி?... வைரல் வீடியோ....!

சுருக்கம்

ஆனால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் என்ன என்பது ரசிகர்களுக்கு இன்று வரை  மர்மமாகவே உள்ளது

தீபாவளி கொண்டாட்டமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராவிட்டாலும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி சரவெடியை வெளியான டீசர் தற்போது 25 மில்லியன் வியூஸ்களைக் கடந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி மூடில் உள்ளனர். அதேபோல் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள சிம்புவும் தீபாவளி ட்ரீட்டாக ஈஸ்வரன் பட டீசரை இறங்கினார். அதனை எஸ்.டி.ஆர். ரசிகர்கள் தாறுமாறு வைரலாக்கினர். 

 

இதையும் படிங்க: ஓடிடியில் உலக சாதனை படைக்கப்போகும் ‘சூரரைப் போற்று’... செம்ம குஷியில் சூர்யா ரசிகர்கள்...!

எல்லாரும் பண்ணும் போது நான் மட்டும் என்ன தொக்கா? என்பது போல் சிவகார்த்திகேயன் படத்தின் 2 போஸ்டர்கள் அந்த நாளில் வெளியானது. எஸ்.கே. ஃபேன்ஸை செம்ம குஷியாக்கியது. அதேபோல் தனுஷும் தன் பங்குக்கு ஜகமே தந்திரம் படத்தில் இருந்து புஜ்ஜி பாடலை வெளியிட்டார். இப்படி ஆளாளுக்கு தங்களது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசை அள்ளிக்கொடுத்தனர். 

ஆனால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் என்ன என்பது ரசிகர்களுக்கு இன்று வரை  மர்மமாகவே உள்ளது. படத்தை ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிட்டதோடு சரி அப்டேட் தரவே இல்லையே என்பதால் கடுப்பான அஜித் ரசிகர்கள், போனிகபூரை காணவில்லை என போஸ்டர் அடிக்கும் அளவிற்கு கொந்தளித்துவிட்டனர். 

 

இதையும் படிங்க: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில்... அஜித் மச்சினிச்சி ஷாமிலி கொண்டாடிய கலக்கல் தீபாவளி...!

இந்நிலையில் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியான நயன்தாராவின் மூக்குத்தி அம்மனையும் தங்களது லிஸ்டில் அஜித் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. மூக்குத்தி அம்மனிடம் வலிமை அப்டேட் கேளுங்கள் என கூறி ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் மூக்குத்தி அம்மனின் பவரை யூஸ் பண்ணி வலிமை அப்டேட் வாங்கிக் கொடுப்பதும் கஷ்டம் தான் என்கிறார்கள். இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்