
துணை நடிகையாக இருந்து நாயகியாக உயர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாப்பத்திரமானாலும் மாஸ் காட்டுவார். ஜோடியாக, தங்கையாக, மகளாக ஹிட் கொடுத்து வந்த இவருக்கு சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதோடு பிற மொழிகளிலும் டப்பிங் ஆனாது. இதையடுத்து பெண் கதாபாத்திரத்திற்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் பூமிகா என்னும் த்ரில்லர் படம் வெளியாகியிருந்தது.
இதையடுத்து தற்போது இவர் ட்ரைவர் ஜமுனா என்னும் படத்தில் நடித்து வருகிறார். வத்திக்குச்சி புகழ் கின்ஸ்லி இயக்கி வரும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் முகத்தில் காயத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் டீ குடிப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி, கவிதா பாரதி மற்றும் பாண்டி ,அபிஷேக் குமார் மற்றும் ஐஸ்வர்யாவின் சகோதரர் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இதுகுறித்து கின்ஸ்லின், “ஐஸ்வர்யாவின் கேரக்டரை மையமாக வைத்து படம் உருவாகிறது. முழுப் படமும் ஒரே நாளில் நடக்கும்கதை.. சென்னையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அவள் செல்லும் ஒரு பயணம். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முழுப் படமும் நேரலையில் படமாக்கப்பட்டது. “வழக்கமாக, ஒரு கார் ஃபிலிம் ஒரு ஸ்டுடியோவிற்குள், நீல நிற துணியில் படமாக்கப்படும். இதை நாங்கள் இரண்டு நாட்கள் முயற்சித்தாலும், ஐஸ்வர்யா அதை நேரடியாக செய்ய ஆர்வமாக இருந்தார். டூப் இல்லாததால், நடிகையே ஒரு குறிப்பிட்ட வேகத்தில் காரை ஓட்டி, கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்ச்சிகளை சிரமமின்றி வெளிப்படுத்தினார்,” என்கிறார் கின்ஸ்லின்.
மேலும். “எங்களிடம் அனல் அரசு மாஸ்டர் இருந்தார், அவர் ஆக்ஷன் காட்சிகளுக்கு நடனம் அமைத்தார். துரத்தல் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமானவை, ஐஸ்வர்யா அவற்றை நன்றாகக் கையாண்டார்,” என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.