விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிப்பில் வருவாகிவரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’.இந்தப் படத்தை மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கிவருகிறார். அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யாவில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதிகள் படப்பிடிப்பு நடந்தது. இதையொட்டி படப்பிடிப்புக் குழுவினர் சென்னை திரும்பியிருந்த நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவ்வப்போது ஸ்பாட்டை விட்டு சொல்லாமல்கொள்ளாமல் கூட ஹோட்டலுக்கு ஓடிவிடுவார் என்று அக்னிச் சிறகுகள் படக்குழுவினர் பகிரங்கமாகப் புலம்புகின்றனர்.
விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிப்பில் வருவாகிவரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’.இந்தப் படத்தை மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கிவருகிறார். அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யாவில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதிகள் படப்பிடிப்பு நடந்தது. இதையொட்டி படப்பிடிப்புக் குழுவினர் சென்னை திரும்பியிருந்த நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
undefined
அக்னிச்சிறகுகள் படத்தில் நாயகியாக, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். ரஷ்யா படப்பிடிப்புக்கு படக்குழுவுடன் அக்ஷரா சென்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. படப்பிடிப்புக்கு மகிழ்ச்சியாக சென்ற அக்ஷரா, ரஷ்யா சென்றதும் அப்படியே மாறிவிட்டாராம். படக்குழுவினரை டார்ச்சர் செய்துவிட்டாராம்.அப்படி நடிக்க மாட்டேன்.. இப்படி நடிக்க மாட்டேன் என்று படப்பிடிப்பில் ஒரே அட்டகாசம் என்று சொல்லப்படுகிறது. பல சமயங்களில் ஷாட்கள் பாக்கி இருக்கும்போதே இயக்குநரிடம் சொல்லாமல் ஹோட்டல் அறைக்கே திரும்பிவிடுவாராம்.
தனுஷ், அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ’ஷமிதாப்’ படத்தின் மூலம் அறிமுகமான அக்ஷரா, தமிழில் அஜித்துடன் ’விவேகம்’, விக்ரமுடன் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ என விரல் விட்டு எண்ணும் படங்களே நடித்திருக்கிறார். அக்ஷரா நடித்த கேரக்டருக்கு முதலில் தன்னைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தனர் என்று மாடல் அழகி மீரா மிதுன் சமீபத்தில் பேட்டிகளில் புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.