
தமிழகத்தை சுற்றி பல பிரச்சனைகள் உள்ளது அதில் முக்கியமானது காவிரி நீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை இதனை நமது அரசு தான் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் யார் ஆட்சிக்கு வருவார், என்கிற குழப்பத்திலேயே பல அரசு பணிகள் தேக்கம் அடைந்துள்ளது இதனை பொதுமக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அதை விட மிக பெரிய பிரச்சனை என்று கருதப்படுவது மீத்தேன் வாயு பிரச்சனை இதற்கு தீர்வு காணாவிட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் தார் பாலைவனம் போல் மாறிவிடும்.
எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்காக இந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேனில் 6.5 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த பகுதி நிலங்களின் கதி என்ன ஆவது? விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆகும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். எனவே மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற ஒரு போராட்டத்தின் மூலம் இந்த சதியை முறியடிக்க வேண்டும்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் முயற்சித்து வருகின்றனர். வாடிவாசலை மீட்டது போல இந்த நெடுவாசலை மீட்டெடுக்கும் விழிப்புணர்வுக்கு இளைஞர்கள் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பது போல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.