தடைகளை தகர்க்கும் பிகில்... எகிப்திற்கு பிறகு ஜோர்டானில் முதல் ரிலீஸ்... தெறிக்கவிடும் விஜய் மாஸ்...!

Published : Nov 05, 2019, 11:03 AM ISTUpdated : Nov 05, 2019, 11:09 AM IST
தடைகளை தகர்க்கும் பிகில்... எகிப்திற்கு பிறகு ஜோர்டானில் முதல் ரிலீஸ்... தெறிக்கவிடும் விஜய் மாஸ்...!

சுருக்கம்

ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் எகிப்தில் வெளியிடப்பட்ட ‘பிகில்’திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து முதல் முறையாக ஜோர்டானில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘பிகில்’ பெற்றுள்ளது. 

தடைகளை தகர்க்கும் பிகில்... எகிப்திற்கு பிறகு ஜோர்டானில் முதல் ரிலீஸ்... தெறிக்கவிடும் விஜய் மாஸ்...!

தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த ‘பிகில்’ திரைப்படம் இதுவரை ரூ.200 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் ராயப்பன், மைக்கேல் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருந்தார் விஜய். பெண்கள் கால்பந்தாட்ட குழுவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் புட்பால் டீம் கோச்சாக நடித்திருந்தார். கடந்த மாதம் அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆன ‘பிகில்’ திரைப்படம், இதுவரை பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் ஆகிய படங்களின் வசூலையும் ‘பிகில்’ஊதித்தள்ளி வரலாற்று சாதனை படைத்து வருகிறது. பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட ‘பிகில்’ படம் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ்,லண்டன், அரபு நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட‘பிகில்’திரைப்படம் அங்கும் வசூலில் அசுர வேகம் காட்டி வருகிறது. 

பல கலவையான விமர்சனங்களைப் பெற்ற‘பிகில்’திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் ரஜினி படத்திற்கு இணையாக ‘பிகில்’ திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது படம் ரிலீஸ் செய்யப்பட்டு 12 நாட்கள் ஆன போதிலும் சென்னை, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விஜய்யின் ‘பிகில்’மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் வேறு எந்த தமிழ் படங்களும் செய்யாத சாதனையை ‘பிகில்’ திரைப்படம் செய்து வருவதால், விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் ‘பிகில்’திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி எகிப்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. எகிப்தில் எந்த ஒரு தமிழ் படமும் திரையிடப்பட்டதில்லை என்ற வரலாற்றை பிகில் திரைப்படம் முதல் முறையாக முறியடித்தது. ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் எகிப்தில் வெளியிடப்பட்ட ‘பிகில்’திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து முதல் முறையாக ஜோர்டானில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘பிகில்’ பெற்றுள்ளது. ஜோர்டானில் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ‘பிகில்’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. காலை 11 மணி, மதியம் 3.30 மணி மற்றும் இரவு 8 மணிக்கு படம் திரையிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய செல்போன்கள் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?