ஸ்லிம் தோற்றத்தில் செம்ம அழகாக இருக்கும் வரலட்சுமி... வைரலாகும் க்யூட் போட்டோஸ்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 26, 2020, 6:28 PM IST

என்ன தான் நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த தமிழ் நடிகையாக இருந்தாலும் வரலட்சுமிக்கு தடையாக இருந்தது அவரது உடல் எடை மட்டுமே. 


கடந்த ஆண்டு முழுக்க நடிகை வரலட்சுமிக்கு மிக முக்கியமான ஆண்டு என்றுதான் கூற வேண்டும். நடிகர் விஜயுடன் சர்க்கார், தனுஷ் நடித்த மாரி 2 என்று பல படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். நிறைய படங்களில் இவருக்கு வில்லி ரோல் கொடுக்கப்பட்டது.அதேபோல் தற்போது அவருக்கு நிறைய படங்களில் வில்லி ரோல் கிடைத்துள்ளது. வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2 ஆகிய படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

Latest Videos

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மக்கள் செல்வி எனும் பட்டத்தை வழங்கியது டேனி படக்குழு. அது கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமான தலைப்பு என பிரச்சனைகள் கிளம்பினாலும் ரசிகர்கள் இவரை செல்லமாக மக்கள் செல்வி என்றே அழைக்கின்றனர். இந்த தலைப்பு கிடைத்த பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

என்ன தான் நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த தமிழ் நடிகையாக இருந்தாலும் வரலட்சுமிக்கு தடையாக இருந்தது அவரது உடல் எடை மட்டுமே. இப்போது அரும்பாடுபட்டு அதையும் குறைத்துவிட்டார். கணிசமான உடல் எடையை குறைத்து பார்க்க செம்ம ஸ்லீம் லுக்கில் இருக்கும் வரலட்சுமி சூப்பர் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

 

 

 

 

click me!