
நடிகை திரிஷா தனக்கு பிடித்தமான விலையுயர்ந்த கார்களை அடுத்தடுத்து வாங்கி வருகிறார், அதில் தற்போது அவர் புதிய ஜாகுவார் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது அவர் நாற்பது வயதை தொட்ட போதும் இன்னமும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இருந்து வருகிறார்.
எத்தனையோ புதுப்புது நடிகைகள் வந்தாலும் சினிமாவில் தனக்கென முன்னணி இடத்தை தக்க வைத்துள்ள திரிஷா, தோற்றத்தாலும் முகப்பொலிவாலும் இளம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவருடைய ஒல்லியான தோற்றம், சதை போடாத உடற்கட்டு, வசீகர முகம், அவரை தமிழ் சினிமா மார்க்கெட்டில் தொடர்ந்து உச்சத்திலேயே வைத்திருக்கிறது. வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு விடாமுயற்சி, மற்றும் கடின உழைப்பின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் திரிஷா. ஒரு நடிகை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தாக்குப் பிடிப்பது மிகக் கடினம் என்ற நிலையில் சமீபத்தில் கூட அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஹீரோயினாக நடித்திருக்கிறார் அந்த அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் அதே ரேஞ்சில் இருக்கிறது. திரிஷாவிற்க அதிகம் பிடித்த இரண்டு விஷயங்கள் உண்டு ஒன்று விதவிதமாக நாய்கள் வாங்குவது.
அதேபோல அளவுக்கு அதிகமாக பிடிக்கும் சொகுசு கார்களை வாங்குவது, அவரிடம் ஏற்கனவே 2 சொகுசு கார்கள் இருக்கிறது. அவருக்கு பிடித்த உயர்தர கார்களான மெர்சிடஸ் பென்ஸ், மற்றும் பிஎம்டபிள்யூ, எப்போதும் அவரது வீட்டு காரிடாரில் மூன்று கார்கள் நிற்குமாம், அதில் ஏற்கனவே 2 விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கும் நிலையில் புதிய வரவாக ஜாக்குவார் காரை லேட்டஸ்ட்டாக அவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது. அவர் புதிதாக கார் வாங்கியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.