கிசுகிசு எழுதும் பத்திரிகையாளர்களை பர்சனலாக சந்திக்க விரும்பும் தமன்னா...மேட்டர் இதுதான்...

Published : Oct 10, 2019, 12:43 PM IST
கிசுகிசு எழுதும் பத்திரிகையாளர்களை பர்சனலாக சந்திக்க விரும்பும் தமன்னா...மேட்டர் இதுதான்...

சுருக்கம்

அப்போது பேசிய அவர்,’தேவி, தேவி 2 படங்களில் நடித்த பின்னர் மீண்டும் பேய் படத்தில் நடிப்பதில் நானும் விரும்பவில்லை. ஆனால் இது தெலுங்கில் அனந்த பிரம்மோ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம். மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். கண்ணே கலைமானே, சைரா என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு காமெடி படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன். 

தான் இதுவரை யாரையுமே காதலிக்கவில்லை என்றபோதும் தொடர்ந்து எதாவது ஒரு காதலருடன் தன்னை இணைத்து கிசு கிசுக்கள் எழுதும் பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் அவர்கள் மூலமாவது ’அந்த காதலரை’அடைய விரும்புவதாகவும் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ள’பெட்ரோமாக்ஸ்’என்ற படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நேற்று முன் தினம் பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,’தேவி, தேவி 2 படங்களில் நடித்த பின்னர் மீண்டும் பேய் படத்தில் நடிப்பதில் நானும் விரும்பவில்லை. ஆனால் இது தெலுங்கில் அனந்த பிரம்மோ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம். மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். கண்ணே கலைமானே, சைரா என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு காமெடி படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன். 

இந்த படம் நான் ஸோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் படமல்ல. தமன்னா நடிக்கும் என்ற போஸ்டரில் போடுவதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணிபுரிந்த டெக்னிஷியன்ஸ் அனைவருமே ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர். எனவே அனைவருடைய படம் தான் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் கண்டிப்பாக சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்கத்தான் விருப்பம். இப்போது வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது ஃபேஷனாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்க முன்வந்தால் அதில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. ஆனால் கிசுகிசு எழுகிறவர்கள் எப்போதும் யாருடனாவது இணைத்து என் காதல் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி இணைத்து எழுதுகிற ஒருவரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தால் அவரைக் காதலிக்கக்கூட தயாராக இருக்கிறேன்’என்று செம ஜாலி மூடில் பேசினார் தமன்னா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்