
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் ஒன்னும் சொல்லமாட்டார் என்றும், அதற்கு அவர் முழு சுதந்திரம் தந்திருக்கிறார் என்றும் பிரபல நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய படங்களில் தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை சுர்வீன் சாவ்லா. இவர் கடந்த 2015ல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
டிசம்பர் 2017 ல் தான் அவரது கணவர் பற்றி வெளியில் கூறினார். மூன்று ஆண்டுகளாக திருமணம் நடந்ததை அவர் மறைத்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் பொதுவாக எந்த மொழி நடிகைகளாக இருந்தாலும் திருமணத்துக்குப் பின்பு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். கணவர் வீட்டு குடும்பத்துடன் ஐக்கியமாகி விடுவார்கள்.
ஆனால் நடிகை சுர்வீன் சாவ்லா மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் நடிகை சாவ்லா, கேப்டவுனில் தனது கணவர் அக்ஷய் தக்கருடன் தற்போது விடுமுறையை கழித்து வருகிறார். தனது திருமணம் குறித்து அவர் பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை அழகாக இருக்கிறது" என்று கூறினார்.
தனது கணவர் தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ் செய்தாலும். ஏன் நிர்வாணமாக நடித்தாலும்கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்தளவுக்கு அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவர் என்னை புரிந்து வைத்து உள்ளார். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன் என நடிகை சுர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.