
நம் நாடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில், மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை ஸ்ரீதேவி.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மிகவும் பிஸியான நடிகையாக மாறிய இவர் 80 களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்கள் படங்களிலும், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப் படங்களிலும் பரபரப்பாக நடிக்கத் தொடங்கினார்.
நடிப்பின் உச்சத்தில் இவர் இருந்த காலத்தில், இவர் படத்தைப் பார்க்க கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களும் உண்டு. அப்படி இறந்த ஒரு ரசிகரின் வீட்டுக்கே சென்று அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, இறுதிச் சடங்குகள் முடியும் வரை இருந்தார் ஒரு முறை.
இவருக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும் பல இயக்குனர்கள் இவரை ஹீரோயினாக வைத்து படம் இயக்கினர். அதுபோல் பாலிவுட் திரைப்படம் ஒன்று காட்டில் நடந்ததாம். அந்தப் படப்பிடிப்பில் கைக்குழந்தை ஜான்வியுடன் கலந்துகொண்டார் ஸ்ரீதேவி. அப்போது இவரை பார்க்க மிகப் பெரிய ரசிகர் கூட்டமே சூழ்ந்தது. அங்கே திடீர் என ரசிகர் ஒருவருக்கு காக்கா வலிப்பு ஏற்பட்டதாம். அதைப்பார்த்த பலர் ஏதேனும் இரும்பு கிடைக்குமா என்று இரும்பைத் தேடி ஓடினராம். ஆனால் ஸ்ரீதேவியோ ஏதாவது ஒரு பாத்திரம் கிடைக்குமா என்று ஒருவரிடம்கேட்டு வாங்கி, மறைவாகச் சென்று தாய்ப் பால் எடுத்து வந்து தந்தார். அந்த நபருடைய வாயில் தாய்ப் பாலை ஊற்றியதும் அவருக்கு உடனே வலிப்பு நின்று விட்டதாம்.
இது குறித்து அவரிடம் ஒரு தொலைக்காட்சி கேள்வி எழுப்பிய போது, வலிப்புக்கு இரும்பு கொடுப்பதை விட, தாய்ப் பால் சிறந்த மருந்து என்று தன்னுடைய பாட்டி கூறியுள்ளதாகத் தெரிவித்தார். ஸ்ரீதேவி அப்போதைக்கு கிட்டத் தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், தாய் உள்ளதோடு அவர் செய்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.