Samantha rehersal viral : டைட்டான உடையில் ரிகர்சல்... சமந்தாவின் வீடியோவை ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Jan 07, 2022, 11:56 AM ISTUpdated : Jan 07, 2022, 12:24 PM IST
Samantha rehersal viral : டைட்டான உடையில் ரிகர்சல்... சமந்தாவின் வீடியோவை ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்

சுருக்கம்

‘ஊ சொல்றியா’ பாடலுக்கு ரிகர்சல் செய்தபோது எடுத்த வீடியோவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா கடந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலித்தார். 

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடலுக்காக படத்தை பார்த்தவர்கள் ஏராளம்.

"

இந்நிலையில், ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு ரிகர்சல் செய்தபோது எடுத்த வீடியோவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டைட்டான உடையில் வளைந்து நெளிந்து அவர் போடும் கவர்ச்சி நடனத்தை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை