
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
தற்போது நிதினுடன் பீஷ்மா என்ற படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா பங்கேற்றார்.
அவரிடம் எந்த நடிகர் உங்கள் நண்பர், காதலர், கணவராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா நடிகர் விஜய் தனக்கு காதலராக வரவேண்டும் என்றும், சின்ன வயதில் இருந்தே அவர் மேல் தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் கூறினார். மேலும் தளபதியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர் நிதின் தனக்கு நண்பராக வரவேண்டும் என்று கூறிய ராஷ்மிகா, கணவராக தமிழ் நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். ஆனால் அவரது பெயரைக் கூறாமல் தவிர்த்துவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.