கலவரமாய் வெடிக்கும் குடியுரிமை சட்டம்... ரம்யா நம்பீசன் பகிர்ந்த பகீர் புகைப்படம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 29, 2020, 12:30 PM IST
Highlights

இந்த உலகில் அனைவரும் சமமானவர்களே என மண்டை ஓடு புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். 
 

இந்த உலகில் அனைவரும் சமமானவர்களே என மண்டை ஓடு புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். 

மத்திய அரசு கடந்தாண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது. அதனை எதிர்த்தும், ஆதரித்தும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில், டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, அவர்கள் ஒருவரை ஒருவர் கற்கள், கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 40ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், நடிகை ரம்யா நம்பீசன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் மண்டை ஓடு இருக்கிறது. அதில் அனைத்து மதத்தின் பெயரும், ஜாதிகள் பெயரும் இடம் பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் மண்டை ஓடு ஒன்றுதான். சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மதம், ஜாதியால் பிரிக்கப்பட்டாலும் மனிதனின் மண்டை ஓடு, ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புகைப்படத்தால் உணர்த்தியுள்ளார் ரம்யா நம்பீசன்.
 

pic.twitter.com/dZMFMIFKS9

— Ramya Nambessan (@nambessan_ramya)

 

click me!