
ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி 2 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் பிரியா பானர்ஜி. தெலுங்கில் கிஸ், அசுரா, ஐஸ்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதால் மும்பையில் தங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பிரியா பானர்ஜி ஆன்லைன் மூலம் மது வாங்குவதற்காக ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவரை போனில் தொடர்பு கொண்ட ஆசாமி ஒருவர், முதலில் பணம் செலுத்துங்கள். பின்னர் சரக்கை டெலிவரி செய்கிறேன் என கூறியுள்ளார். அந்த ஆசாமியின் பேச்சை நம்பிய பிரியா, அவரிடம் டெபிட் கார்டின் அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். மதுவிற்காக காத்திருந்த பிரியாவிற்கு, அக்கவுண்டில் இருந்து 22 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசெஜ் வந்துள்ளது.
உடனே திடீர் ஆசாமிக்கு போன் செய்த பிரியா பணம் எடுக்கப்பட்டது குறித்து கேட்டுள்ளார். அவரோ தெரியாமல் தவறு நடந்துவிட்டது. உங்க கூகுள்பே விவரம் கொடுங்க நான் பணத்தை திரும்பி தரேன் என கூறியுள்ளார். அதையும் நம்பி கொடுத்த உடனே, அதில் இருந்து 12 ஆயிரம் ரூபாயை சுருட்டியுள்ளார் அந்த பலே ஆசாமி.
இதுகுறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய மும்பை காவல்துறை, பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட வங்கிக்கு போன் செய்து அதனை நிறுத்திவைக்க கூறியுள்ளனர். இதனால் நடிகையின் பணம் தப்பித்தது. தற்போது மோசடி ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.