இப்போ தெரியுதா அவங்க வேதனை? நேரம் பார்த்து போட்டு தாக்கும் நமீதா! உருக வைக்கும் உண்மை..!

Published : Mar 24, 2020, 05:24 PM IST
இப்போ தெரியுதா அவங்க வேதனை? நேரம் பார்த்து போட்டு தாக்கும் நமீதா! உருக வைக்கும் உண்மை..!

சுருக்கம்

நடிகை நமீதா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது மாட்டும் இன்றி, அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.  

நடிகை நமீதா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது மாட்டும் இன்றி, அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

உலக மக்களை பயமுறுத்தி வரும், கோரோனோ வைரஸ் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளதால், அதனை தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், 144 தடை விதிக்கப்பட்டு... வீட்டை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டில் இருந்தபடியே வேலையை தொடர, பல நிறுவனங்கள் கூறியுள்ளது. மேலும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே விளையாடாமல் பெற்றோர்கள் பார்த்து கொள்வது அவசியமாகியுள்ளது.

இப்படி வீட்டின் உள்ளேயே இருப்பது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருப்பினும், அதனை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை நமீதா.... சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய விலங்குகளை உயிரியல் பூங்காவில் அடைப்பது எந்த விதத்தில் நியாயம் என கேட்கும் விதமாக ஒரு ட்விட் போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்,  நான் ஒருபோதும் உயிரியல் பூங்காக்களை ஆதரிப்பது இல்லை...  யாரையும் அங்கு செல்ல ஊக்குவிப்பதும் இல்லை.

ஊரடங்கு உத்தரவால் ஒரு சில நாட்கள் கூட உள்ளே இருக்க முடியாமல், வெளியே செல்ல நாம் ஆசைப்படுகிறோம். 

அதே போல் தான் மிருகங்களும்... நம்முடைய மகிழ்ச்சிக்காக அவற்றைப் பூட்டும்போது அவைகளும் அப்படித்தான் உணரும். உங்கள் குழந்தைகளுக்கு வாழும் விலங்குகளைக் காட்ட விரும்பினால், தயவுசெய்து அவற்றை மடிக்கணினியில் காட்டுங்கள் அல்லது சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆனால் தயவு செய்து அவற்றை கூண்டில் வைத்திருப்பதை காட்டாதீர்கள்.

 

அவைகள் மனச்சோர்வு மற்றும் சோகத்தால் இறக்கின்றனர். நினைவில் வைத்து கொள்ளுங்கள், மிருகக்காட்சிசாலைகள் நிரம்பி இருக்க காரணம், நாம் அங்கு சென்று அவர்களை பார்க்க டிக்கெட்டுகளை வாங்குகிறோம். நாம் செல்வதை நிறுத்தினால், அவைகள் காட்டுக்குள் விடப்படும் என, தகுந்த நேரத்தில் இந்த ட்விட்டை போட்டுள்ளார். இந்த ட்விட்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Samyuktha Menon : ஆத்தாடி! வர்ணிக்க வார்த்தையே இல்ல.. 'வாத்தி' பட நாயகி சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Anchor Dhivyadharshini : தம்பி கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? தொகுப்பாளினி டிடி கட்டிய காஞ்சிப்பட்டின் விலை தெரியுமா?