நயன்தாராவிடம் கூட போகாமல் கீர்த்தியை தேடி வந்த அதிர்ஷ்டம்! ஆன அதுலயும் ஒரு ட்விஸ்ட்!

Published : Jan 29, 2019, 04:52 PM ISTUpdated : Jan 29, 2019, 05:08 PM IST
நயன்தாராவிடம் கூட போகாமல் கீர்த்தியை தேடி வந்த அதிர்ஷ்டம்! ஆன அதுலயும் ஒரு ட்விஸ்ட்!

சுருக்கம்

முன்னணி கதாநாயகிகள் பலரும் இணைந்து பணியாற்ற விரும்பும், இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதால் கீர்த்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்பது? சந்தேகமாகவே பார்க்கப்படுதுகிறது.  

முன்னணி கதாநாயகிகள் பலரும் இணைந்து பணியாற்ற விரும்பும், இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதால் கீர்த்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்பது? சந்தேகமாகவே பார்க்கப்படுதுகிறது.

'மகாநதி' படத்தில் தனி நடிகையாக நடித்து, கீர்த்தி சுரேஷ் அவருடைய திறமையை நிரூபித்து விட்டதால்,  தற்போது முன்னணி இயக்குனர்களின் நாயகிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இணைந்துள்ளது.

சில வளர்ந்து வரும் கதாநாயகிகள், இவருக்கு மட்டும் எப்படி வாய்ப்புகள் கிடைக்கிறது என இன்னும் குழப்பத்தில்தான் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

அதற்கேற்ற போல் கீர்த்தி சுரேஷ் மிகவும் தெளிவாக கதைகளை தேர்வு செய்கிறாரோ இல்லையோ?  விஜய், சூர்யா, விஷால் என  முன்னணி நடிகர்கள் படங்களில் தான் நாயகியாக நடிக்க வேண்டும், தப்பி தவறி கூட அறிமுக நடிகருக்கோ அல்லது வளர்ந்து வரும் நடிகர்கள் படத்திலோ நடித்து விடவே கூடாது என்பதை கொள்கையாகவே வைத்துள்ளார்.

மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர்கள் கதை சொன்னால் அதையும் தவறாமல் கேட்டு வருகிறார். 

இந்நிலையில் நயன்தாராவுக்கு கூட, கிடைக்காத அதிர்ஷ்டம் கீர்த்தி சுரேஷுக்கு அடித்துள்ளது.  அது என்னவென்றால், பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த, உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த,  இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக இயக்க உள்ள  'RRR ' படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு,  அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.  

ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது, இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு இரண்டாவது ஹீரோயின் ரோல் தான் கொடுக்கப்பட உள்ளதாம்.  இதனால் முன்னணி நடிகர்களை தேடித்தேடி கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது நாயகி ரோலை ஏற்பாரா? என்பது சந்தேகம் தான் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

மேலும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி சோப்ரா தான் இந்த படத்தில் மெயின் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி