
வலைதளங்களிலிருந்து ட்விட்டர் ஆப்புக்கு மட்டும் நிரந்தரமாக ஒரு ஆப்பு வைத்து விட்டால் அக்கா கஸ்தூரி தற்கொலை பண்ணிக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு வெறிகொண்டு தொடர்ந்து சர்ச்சைப் பதிவுகள் இடுவதும் அதற்குக் கிடைக்கும் எதிர்வினைகளை ரத்தம் சொட்டச் சொட்ட ரசிப்பதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு தான் பாயம்மா கெட் அப்பில் இருக்கும் இரண்டு படங்களை வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்துகளைச் சொல்லும் செய்தியும் வலைதளங்களில் ‘இஸ்லாம் மதத்துக்கு மாறிய நடிகை கஸ்தூரி’ என்ற தலைப்பில் பரபரப்பாகி வருகிறது. அவர் விரும்பியதும் இந்த பரபரப்பைத்தான்.
கஸ்தூரி இரு புகைப்படங்களை வெளியிட்ட அப்பதிவில் ‘ரம்தான் கரீம்..நோன்பு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு தெய்வீகப் பொருத்தமாக இம்மாதம் ஒரு முஸ்லிம் பெண் வேடத்தில் நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்புகைப்படங்களை வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது’ என்று பதிவிட்டிருந்தார்.
இப்பதிவுக்கு வழக்கம்போல், குறிப்பாக இஸ்லாமிய மக்களிடமிருந்து கஸ்தூரிக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஒருவர் ‘பிரியாணி வேணும்னா நேரடியாக் கேக்க வேண்டியதுதான?. அதுக்கெல்லாமா இவ்வளவு கஷ்டப்பட்டு கெட் அப் போடணுமா??’என்று கமெண்டியிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.