
பாண்டியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின், பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தேவ் டி, ஹேப்பி என்டிங், கல்லி பாய் உள்ளிட்ட படங்கலில் நடித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு பிரபல இந்தி பட இயக்குநரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனச்கசப்பு காரணமாக, 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
ஹாலிவுட் பட இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என ஓபனாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு மறுத்ததால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டினார். இவர் நடித்த தேவ் டி படமும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானர்.
இந்நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்ற நபருடன் காதல் வசப்பட்டு, அவருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்தார். அதனால் கர்ப்பமான கல்கி, தனது நிறைமாத வயிற்றுடன் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.