
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்ற படத்தில் நடிக்கவிருந்தார். டோலிவுட்டின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். 5 வருடத்திற்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து கிடைத்த வாய்ப்பை த்ரிஷா வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு, படத்தில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து த்ரிஷா பதிவிட்டுள்ள ட்வீட்டில், சில சமயங்களில் ஆரம்ப கட்டத்தில் சொல்லப்பட்ட, ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், திடீரென முற்றிலும் மாறிவிடுகிறது. படைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரஞ்சீவி சாரின் படத்தில் இருந்து விலகுகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். என் அன்புடைய தெலுங்கு ரசிகர்களே உங்களை மறுபடியும் எனது அடுத்த படத்தில் சந்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
த்ரிஷாவின் இந்த முடிவுக்கு காரணம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம். அது குறித்து விழா ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, ரெஜினாவின் ஆட்டத்தை ஆகா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுவும் த்ரிஷாவை வெறுப்பேற்றிவிட்டதாக கூறப்படுகிறது. திடீரென த்ரிஷா எடுத்த இந்த முடிவால் அதிர்ச்சியில் உள்ள படக்குழு, கதைக்கு பொருத்தமான ஹீரோயினை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
இதையடுத்து படக்குழுவினர் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 பட்த்தில் நடித்து வருகிறார். இதனிடையே சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால் பெரும் தொகையை சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஓ.கே. சொன்ன தயாரிப்பாளர் தரப்பு, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.