
‘நீட் தேர்வில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளுக்காக குரல் கொடுக்கிறீர்களே? நீங்கள் இயக்கிய படம் சரியாக ஓடாவிட்டால் தற்கொலையா செய்துகொல்வீர்கள்? என்று இயக்குநர் பா.ரஞ்சித்தை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் பா.ஜ.க.வின் தமிழக பிரச்சார பீரங்கியும் தமிழ் நடிகையுமான காயத்ரி ரகுராம்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்த இரு மாணவிகளின் தற்கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில்,...நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்! என்று எழுதியிருந்தார்.
அவரது பதிவு முற்றிலும் தவறானது என்று வாதிடும் வகையில் அவரது ட்விட்டுக்கு பதிலளித்த நடிகை காயத்ரி,...நீங்கள் எடுக்கும் ஒரு படம் தோற்ற்விட்டால் தற்கொலையா செய்துகொள்வீர்கள்? அல்லது அதைவிட நல்ல படம் எடுக்க முயல்வீர்களா? அல்லது ஒரேயடியாக படங்களையே தடை செய்யச் சொல்வீர்களா? என்று அரைவேக்காட்டுத்தனமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இதே காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘சேரி பிகேவியர்’ என்ற தரைமட்டமான வார்த்தையை உபயோகித்து கமல் தொடங்கி நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரின் கடும்கோபத்துக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.