சரக்கு, தம் அடிக்கிற கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க...வாண்டட் ஆக வண்டியில் ஏறும் மதுரைக்காரப் பொண்ணு...

By Muthurama Lingam  |  First Published Mar 8, 2019, 12:05 PM IST

‘நான் சினிமாவுக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. இதுவரை ‘மி டு’ மாதிரியான ஒரு கசப்பான அனுபவம் கூட எனக்கு ஏற்பட்டது இல்லை.  சினிமாவுல நாம எப்படி நடந்துக்கிறோம்ங்குறதைப் பொறுத்துதான் மத்தவங்க நடந்துக்குவாங்க’ என்கிறார் நடிகை ஆதிரா பாண்டி லெட்சுமி.



‘நான் சினிமாவுக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. இதுவரை ‘மி டு’ மாதிரியான ஒரு கசப்பான அனுபவம் கூட எனக்கு ஏற்பட்டது இல்லை.  சினிமாவுல நாம எப்படி நடந்துக்கிறோம்ங்குறதைப் பொறுத்துதான் மத்தவங்க நடந்துக்குவாங்க’ என்கிறார் நடிகை ஆதிரா பாண்டி லெட்சுமி.

இயக்குநர் நவீனின் ‘மூடர் கூடம்’ படத்தில் கவனம் பெற்று ‘ஒரு குப்பைக்கதை’ படத்தில் பிரபலமாகி சமீபத்தில் ரிலீஸான ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனைன் ‘டு லெட்’ படத்தின் மூலம் டெர்ரர் வீட்டு ஓனராக மிரட்டியிருப்பவர் நடிகை ஆதிரா. சொந்த ஊர் மதுரை என்பதாலோ என்னவோ படு தெனாவட்டாகப் பேசுகிறார் ஆதிரா.

Tap to resize

Latest Videos

‘சினிமாவுல நடிக்கணும்னு முடிவு பண்ணுனப்பவே செலக்டிவா படம் செய்யணும்தான் நினைச்சேன். இதுவரைக்கும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப்போனதில்லை. இதுவரைக்கும் கிடைச்ச கேரக்டர்கள் எல்லாமே என் சொந்தக் கேரக்டருக்கு சம்பந்தமில்லாதவை. ஆனாலும் நடிப்புன்னு வந்துட்டா டைரக்டர்கள் சொல்ற எல்லாத்தையும் செய்யணும். நான் பேசிக்கலா மாடர்ன் பொண்ணு. ஆனா தள்ளு வண்டி வியாபாரி, மீன்காரி, அடாவடி ஹவுஸ் ஓனர்னு கேரக்டர்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

நடிப்புன்னு வந்துட்டா கண்டிப்பா வெரைட்டியான கேரக்டர்கள் பண்ணனும் . சொல்லப்போனா பொம்பளை பிரகாஷ்ராஜ்ன்னு தமிழ்சினிமாவுல பேர் வாங்கணும்னு ஆசை. ஏற்கனவே ‘ஒரு குப்பைக்கதை’ படத்துல தண்ணி அடிக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இனியும் அப்படி சரக்கடிக்கிற தம் அடிக்கிற கேரக்டர்ல நடிக்க டைரக்டர்கள் கூப்பிட்டா கண்டிப்பா உற்சாகமா நடிப்பேன்’ என்கிறார் ஆதிரா.

இதைக் கொஞ்சம் முந்தியே சொல்லியிருந்தா ‘90 எம்.எல்’ படத்துல உங்களுக்கு கேங் லீடர் கேரக்டர் கொடுத்திருப்பாங்களே ஆதிரா மேடம்.

click me!