நாட்டுப்புற பாடகியும், பிரபல நடிகையுமான பரவை முனியம்மா, கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று உயிரிழந்தார்.
நாட்டுப்புற பாடகியும், பிரபல நடிகையுமான பரவை முனியம்மா, கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து இவரை பற்றிய பல தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் பரவை முனியம்மா கடைசியாக, பிரபல நடிகரின் படத்தை, நடக்க முடியாத போதிலும், வீல் சேரில் வந்து திரையரங்கில் பார்த்து அவரை வாழ்த்தியுள்ளார்.
undefined
இந்த ஆண்டு நடிகர் அபி சரவணன் நடிப்பில் வெளியான 'மாயநதி' படத்தை தான் பரவை முனியம்மா கடைசியாக பார்த்தார். அபி சரவணன் பரவை முனியம்மா பலமுறை சிகிச்சைக்கு பணமின்றி கஷ்டப்பட்ட போது அவருக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபி சரவணன் நடிப்பில் வெளியான இந்த படத்தில், வெண்பா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
'மாயநதி' படத்தை பார்ப்பதற்காக நடக்க முடியாத நிலையிலும், பரவை முனியம்மா வீல் சேரில் அமர்ந்தபடி மதுரையில் உள்ள திரையரங்கம் ஒன்றில், அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து இப்படத்தை பார்த்து அவரை வெகுவாகப் பாராட்டினார்.