
கேரள வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை அனன்யா உருக்கமாக பேசி உள்ளார்.கேரள மாநிலதில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளது. மக்கள் நிலசரிவில் சிக்கி பெரும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 324 நபர்கள் இறந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பலர் வீடுகளை இழந்து உள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. உடுக்க உடை உண்ண உணவு இன்றி பெரிதும் தவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இதில், நடிகர் நடிகர் ஜெயராம்,பிருத்விராஜின் வீடும் சிக்கியது. பிருத்விராஜின் தாயார் மல்லிகா பல சிரமங்கள் மத்தியில் மீட்கப்பட்டார். இந்நிலையில் பிரபல நடிகை அனன்யாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.